அண்மைய செய்திகள்

recent
-

ஜப்பானிலிருந்து 6300 கோடியுடன் நாடு திரும்பும் ரணில்!


இலங்கையின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் 6300 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, அங்கு நடைபெறும் மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இலங்கையின் முக்கிய அபிவிருத்திகளுக்கு 6300 கோடி ரூபாவினை வழங்குவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கே இந்த 6300 கோடி ரூபாய் வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும், இந்த நிதியுதவியில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை கடனாக வழங்கவுள்ளது.

இது தவிர, களுகங்கை நீர் விநியோக விரிவாக்கத் திட்டத்துக்கு 31.81 பில்லியன் யென் கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதுடன், பொருளாதார சமூக அபிவிருத்தித் திட்டத்துக்கு 1 பில்லியன் யென் கொடையாக வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜப்பானின் இந்த உதவித் திட்டத்தினை கொண்டு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊடா மாகாணங்களில், உள்ளூர் வீதிகள், சிறிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறியளவிலான நீர் விநியோகத் திட்டங்கள்,மேற்படி மாகாணங்களின் வாழ்வாதார மற்றும் உற்பத்தியுடன் நேரடித் தொடர்புடைய திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் ஆகியோர் முன்னிலையில், இலங்கை, ஜப்பான் தூதுவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் ஜப்பான் இந்த 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டத்துடன், ஒன்று கொடைத் திட்டமாகவும் வழங்குகிறது என்பது சுட்டிக்காத்தக்கது.

ஜப்பானிலிருந்து 6300 கோடியுடன் நாடு திரும்பும் ரணில்! Reviewed by Author on April 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.