பாகிஸ்தானை வீழத்தி ஆசியா கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை...
ஆசியா கிண்ண வளர்ந்து வரும் அணிகளுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தனை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
சிட்டகாங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி 42 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சபர் கோஹார் தலா 26 ஓட்டங்களை எடுத்தனர். இலங்கை சார்பல் பந்துவீச்சில் செஹான் ஜயசூரிய 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி, 23 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்து அசத்தல் வெற்றிப்பெற்றது.
இலங்கை அணி சார்பில் சமரவிக்ரம 45 ஓட்டங்களை குவித்தார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக செஹான் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.
பாகிஸ்தானை வீழத்தி ஆசியா கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை...
Reviewed by Author
on
April 04, 2017
Rating:

No comments:
Post a Comment