ஜனாதிபதி கலந்து சிறப்பித்த அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 20வது வருடாந்த பொதுக்கூட்டமானது 2017.04.04 அன்று அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சமன் இரத்னபிரிய அவர்களின் தலைமையில் இளைஞர் கேட்போர்கூடம், மகரகம, கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். அவரோடு இணைந்து சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. அனுர ஜெயவிக்ரம அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி, சுகாதார சேவையில் தாதியர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும், நாடாளவிய ரீதியில் காணப்படும் தாதியர்களின் பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கான பிரச்சனைகளை கவனத்திற்கொண்டு தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சின் செயலாளர் மற்றம் சுகாதார அமைச்சர், சங்கத்தின் குறுகியகால வெற்றிகளைச் சுட்டிக்காட்டினார்கள். இலங்கையில் முதலாவது தாதியர்பீடம் உருவாக்குவதற்கு சங்கத்தின் பங்களிப்பு போன்றவற்றையும் பாராட்டினர். தாதியர்பீடம் உருவாக்குவதற்கான சகல வேலைப்பாடுகளும் முடிவடைந்துவிட்டன, எதிர்வரும் காலத்தில் அனைத்து தாதியர்களும் பட்டதாரிகளாக முடியும் என கூறியிருந்தார்.
-- முல்லை கதிர்..
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி, சுகாதார சேவையில் தாதியர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும், நாடாளவிய ரீதியில் காணப்படும் தாதியர்களின் பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கான பிரச்சனைகளை கவனத்திற்கொண்டு தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சின் செயலாளர் மற்றம் சுகாதார அமைச்சர், சங்கத்தின் குறுகியகால வெற்றிகளைச் சுட்டிக்காட்டினார்கள். இலங்கையில் முதலாவது தாதியர்பீடம் உருவாக்குவதற்கு சங்கத்தின் பங்களிப்பு போன்றவற்றையும் பாராட்டினர். தாதியர்பீடம் உருவாக்குவதற்கான சகல வேலைப்பாடுகளும் முடிவடைந்துவிட்டன, எதிர்வரும் காலத்தில் அனைத்து தாதியர்களும் பட்டதாரிகளாக முடியும் என கூறியிருந்தார்.
-- முல்லை கதிர்..
ஜனாதிபதி கலந்து சிறப்பித்த அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
April 04, 2017
Rating:

No comments:
Post a Comment