ஜனாதிபதி தமிழ்,முஸ்ஸீம் மக்களை இன்று ஒதுக்கி விட்டார்-முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆதங்கம்.(படம்)
மூன்று நாட்களில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படுவீர்கள் என்ற உறுதி மொழியுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் இன்று வரை மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் கடற்படையினர் தமது குடும்பங்களை முள்ளிக்குளம் மக்களின் வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளதை தான் வண்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் தலைவியும்,வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 16 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
-இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் பிரதி நிதிகள் , மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து உரையாடினர்.
-பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,,,
-முள்ளிக்குளம் கிராம மக்கள் 16 ஆவது நாளாக தமது செந்த நில மீட்புக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
-இந்த மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நானும் என் சக தோழர்களும் வருகை தந்தோம்.2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3 நாட்களில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படுவீர்கள் என கூறி கடற்படையினர் முள்ளிக்குளம் கிராம மக்களை பலவந்தமாக வெளியேற்றினர்.
அந்த மக்களின் உடமைகள் எவையும் கையில் எடுக்காத நிலையில் அந்த மக்களை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.ஆனால் 10 வருடங்களை கழிந்துள்ள போதும் இன்று வரை அவர்களின் நிலங்களை கடற்படையினர் விடாது தமது கும்பங்களை குடியேற்றியுள்ளனர்.குறித்த செயற்பாட்டை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.
நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு வருட கால நீடிப்பை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் முள்ளிக்குளம் மட்டுமல்ல மறிச்சிக்கட்டி, வலிவடக்கு,கேப்பாப்பிலவு,சம்பூ ர், ஆகிய கிராம மக்கள் தமது சொந்த நில மீட்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
-நில மீட்பு மட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா,கிளிநொச்சி,வடமராச்சி போன்ற பகுதிகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசு ஓர் அசட்டையினமாக நடந்து கொள்ளுகின்றது. இன்று வரை போராட்டக்காரர்களின் போராட்டங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தறுவேண் என்ற ஒரு வாக்குறுதியைக்கூட வழங்காமல் சர்வதேசத்தின் ஆதரவுடன் தன்னுடைய அராஜகமான போக்குகளை கையாண்டு வருகின்றது.
எனவே குறித்த மக்களின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும்.முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வ தேசத்தை சென்றடையும்.
-நியாயமான குறித்த போராட்டங்களுக்கு நாங்களும் எங்களினால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குவோம்.
-நீதி கேட்கும் அமைப்பாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பு செயற்படுகின்றது.
இவ் அமைப்பு வடக்கு கிழக்கில் நிச்சையமாக நீதி மறுக்கப்பட்ட மக்களின் நீதிக் குரலாக இவ் அமைப்பு இணைந்து செயற்படும்.என தெரிவித்தார்.
-அதனைத்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான குழுவினர் மறிச்சிக்கட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்ஸீம் மக்களை சந்தித்தனர்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முஸ்ஸீம் மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் தொடர்ச்சியாக முன் னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
-குறித்த மக்களை சந்தித்த வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் பிரதி நிதிகள் , மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் குறித்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு,புதிய வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி தாம் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

தனது வெற்றியின் பின்னர் தனது வெற்றிக்காக முன் நின்ற முஸ்ஸீம் சமூகத்தை ஜனாதிபதி அவர்கள் ஓரம் கட்டி விட்டதாகவும் தெரிவித்ததோடு,தமிழ்,முஸ்ஸீம் மக்களின் நிலங்கள் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த நிலங்களை மீட்க தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தமிழ்,முஸ்ஸீம் மக்களை இன்று ஒதுக்கி விட்டார்-முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆதங்கம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment