இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரையோக தடுப்பு பணியகம் திறந்து வைப்பு-(படம்)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையிலும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் கிராம அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் அமுலாக்கத்தில் மாந்தை மேற்கு பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரையோக தடுப்பு பணியகம் இன்று வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பணியகத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன் போது சிறப்பு விருந்தினர்களாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் சிறுவர் பாதுகாப்பு அலுவலகர் எஸ்.ரவீந்திரன், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.எம்.ரமீஸ்,மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பலிகக்கார ஆகியோரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரையோக தடுப்பு பணியகம் திறந்து வைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment