ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது ரத்து? அதிரடி காட்டிய Keir Starmer...
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது
பிரித்தானியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020-ல் முடிவடைகிறது.
பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் மாதம் 8-ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் ஒரே வழி என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிடுவோம் என்று பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரெக்சிட் தொடர்பான புதிய திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் கட்சியின் நிழல் மந்திரி Keir Starmer கூறுகையில், வரும் பொதுத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றால், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள பிரெக்சிட் வெள்ளை அறிக்கையை நீக்குவோம்.
நாங்கள் ஏற்கனவே பரிந்துரைத்த 6 முக்கிய விஷயங்களை பிரதிபலிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய பிரெக்சிட் கொள்கை உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியா வசிக்கும் மற்றும் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதே இந்த கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் பிரித்தானியாவில் வசிக்கின்றனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 12 லட்சம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் வசிப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பிரதான எதிர்கட்சியின் இந்த முடிவால், தற்போது பிரதமராக உள்ள தெரச மே என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது ரத்து? அதிரடி காட்டிய Keir Starmer...
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment