பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மன்னார் விஜயம்...
மன்னாரில் முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைதியான முறையில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் மக்களை, பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாரூக் ஆகியோர் அடங்கிய குழுவே குறித்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து முசலி பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த குழு அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மன்னார் விஜயம்...
Reviewed by Author
on
April 01, 2017
Rating:

No comments:
Post a Comment