அண்மைய செய்திகள்

recent
-

மகிந்த, மைத்திரி - அத்வைதம் சம்பந்தர், விக்னேஸ்வரன் - துவைதம்...


ஆசிரியர் ஒருவர் சைவ சித்தாந்தம் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் பற்றி அவர் கருத்துரைத்தபோது மாணவர்கள் மிகவும் விழிப்பாக இருந்து கேட்டனர்.

சைவ சித்தாந்தம் மிகப்பெரும் தத்துவம் கத்தோலிக்க மதம் சார்ந்த அருட்தந்தையர்களும் சைவ சித்தாந்தத்தை கற்று அதன் பொருள் அறிவர்.

எனவே, சைவ சித்தாந்தத்தை நாம் கற்று ணர்ந்து அதன் வழி வாழ்தல் அவசியம் என ஆசிரியர் குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட மாணவன் ஒருவன், அத்வைதம் ; துவைதம் என்பதன் பொருள் யாது? ஐயா என்றான். நல்லது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போன்றல்லாது ஒரு நல்ல கேள்வியை இந்த மாணவன் கேட்டுள்ளான். அவனுக்கு எனது வாழ்த்துக்கள்.

அத்வைதம் ; துவைதம் என்பது பற்றி மாணவர்கள் அறிவது மிகவும் அவசியமாகும்.
அத்வைதம் என்ற தத்துவத்தை ஆதி சங்கரர் நமக்களித்தார். துவைதம் மத்வதுவரால் அருளப்பட்டது.
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றெனக் கூறுவது அத்வைதம்.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறுபட்டவை என்றுரைப்பது துவைதம் என்கிறார் ஆசிரியர்.
இவ்வாறு பொருளுரைத்த ஆசிரியர் மாணவர்களைப் பார்க்கிறார், விளக்கம் போதுமானதாக இல்லை என்பது போல மாணவர்களின் முகபாவங்கள் காட்டிற்று.

இதனை ஆசிரியர் புரிந்துகொண்டாராயினும் ஒரு மாணவன் எழுந்து, ஐயா உதாரணத்துடன் புரிய வையுங்கள் என்றான்.
ஆசிரியர் சற்று சிந்தித்தார் மாணவர்களே! யதார்த்ததோடு கூடிய உதாரணங்களே நல்லவை.

அத்வைதம் என்றால், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று எனக்கூறினேன். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

இந்த நாட்டின் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர்கள் இருவரும் பெயரால், உருவத்தால் வேறுபட்டவர்கள்.

ஆனால், தமிழர்களின் விடயத்தைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் ஒன்றுதான்.
அதிலும் குறிப்பாக போர்க்குற்ற விசாரணை என்பதில், சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை,

குற்றம் செய்த படையினருக்கும் தண்டனை இல்லை. இந்தக் கொள்கையில் மகிந்தவும் மைத்திரியும் ஒன்றல்லவா?

ஆக உருவங்கள், பெயர்கள் வேறுபட்டாலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கின்றனர். இதுதான் அத்வைதம் என்றார் ஆசிரியர்.

ஐயா நல்ல உதாரணம் சொன்னீர்கள். தமிழர்களின் விடயத்தில் மகிந்தவும் மைத்திரியும் அத்வைதம் என்றுணர்ந்தோம் என்று கூறிய மாணவர்கள், இதுபோல் துவைதத்திற்கும் ஓர் உதாரணம் சொல்லுங்களேன் என்றனர்.

நல்லது மாணவர்களே! அதே தமிழர்களின் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன்.

தமிழ் மக்களின் விடயத்தில் அவர் அரசின் பக்கம் ; இவர் தமிழ் மக்களின் பக்கம் ஆக, ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது போல ... என்று ஆசிரியர் கூறிமுடிப்பதற்குள்,

ஐயா! புரிந்து விட்டது சம்பந்தர், விக்னேஸ்வரன் துவைதம் ; மகிந்த, மைத்திரி அத்வைதம் சரிதானே!
ஆமாம், மாணவர்களே! இன்றைய பாடம் இத்தோடு நிறைவுக்கு வருகிறது. நாளை இன்னொரு தத்துவத்தைப் பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.
-வலம்புரி-

மகிந்த, மைத்திரி - அத்வைதம் சம்பந்தர், விக்னேஸ்வரன் - துவைதம்... Reviewed by Author on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.