கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் முழுமையான ஆதரவு
வட கிழக்கு முழுவதும் நாளை வியாழக்கிழமை (27) மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு சனநாயக எதிர்ப்பு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவிக்கையில்,,,
வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீல மீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் சுமார் இரண்டு மாதங்களை கடக்கின்றன.
அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் மன்னார் மாவட்ட மக்களாகிய நாங்களும் மதிக்கின்றோம்.
-அந்த வகையில் குறித்த ஹர்த்தால் கடவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.
மன்னார் மாவட்டத்திலும் ஹர்த்தால் கடவடைப்பு போராட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்குரிய வழிவகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்றைய தினம் தார்மீக அடிப்படையில் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சி வ கரன் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவிக்கையில்,,,

அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் மன்னார் மாவட்ட மக்களாகிய நாங்களும் மதிக்கின்றோம்.
-அந்த வகையில் குறித்த ஹர்த்தால் கடவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.
மன்னார் மாவட்டத்திலும் ஹர்த்தால் கடவடைப்பு போராட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதற்குரிய வழிவகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்றைய தினம் தார்மீக அடிப்படையில் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சி வ கரன் மேலும் தெரிவித்தார்.
கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் முழுமையான ஆதரவு
Reviewed by NEWMANNAR
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment