வவுனியா வர்த்தக சங்கம் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
வவுனியா வர்த்தக சங்கம் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஆதரவினை வழங்குவது தொடர்பாக இன்று (25) இரவு கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போதே முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் கடந்த சில மாதங்களாக நடத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை.
அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை தொடர்போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு வடமராட்சி கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியறியும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வர்த்தக சங்கம் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment