வாழ்வோம் வளம்பெறுவோம்-பத்தில் பதினெண்மர் உள்ளீர்ப்பு
வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம் பெறுவோம் செயற்றிட்டத்தின் பத்தாம் கட்டமானது கடந்த வாரம் அவரது மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.
புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்றிட்டத்தின் பத்தாங்கட்டத்தில் தாயகத்தை சேர்ந்த பதினெட்டு உறவுகள் உள்ளீர்க்கப்பட்டனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
குறுங்கால வாழ்வுடைமை ஊக்குவிப்பினை நோக்காகக் கொண்டு நாளாந்த உணவுத்தேவைக்கு இடர்படும் குடும்பங்களுக்கான உதவி வழங்கலாக வாழ்வோம் - வளம் பெறுவோம் என்ற செயற்றிட்டமானது வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர்ந்து வாழும் ஈழ அன்பர்களின் பணப்பங்களிப்பில் கடந்த 2014.11.20 அன்று ஐம்பத்தொரு தாயக உறவுகளை உள்ளீர்த்து தொடங்கிய இச்செயற்றிட்டமானது அண்மையில் நடைபெற்று முடிந்த பத்தாம் கட்டத்துடன் இதுவரையில் முந்நூற்று முப்பத்தொன்பதின்மரை (339) உள்ளீர்த்திருப்பதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இக்கட்டத்திற்கான பங்களிப்பானது கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இரண்டு பிள்ளையரின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது. திருநிறை இணையர் தர்மராசா செல்வவதனி ஆகியோரின் மகன் செல்வன் மிலன் அவர்களின் இருபத்தோராம் பிறந்தநாளை முன்னிட்டும் திருநிறை இணையர் இராசகுலேந்திரன் - தர்சினி ஆகியோரின் மகன் செல்வன் துளசிராம் அவர்களின் நான்காம் பிறந்தநாளை முன்னிட்டும் வழங்கப்பட்ட பங்களிப்பில் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் பத்தாங்கட்டத்தில் பதினெட்டு ஈழத்தமிழ் உறவுகட்கான குறுங்கால வாழ்வுடைமை ஊக்குவிப்பினை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
April 03, 2017
Rating:

No comments:
Post a Comment