அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பஸார் பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட தென் பகுதி வர்த்தகர்-அதிரடியாக வெளியேற்றிய மன்னார் நகர சபை

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதியில் நகர சபையின் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் பகுதி வியாபரியின் வியாபார நடவடிக்கைகள் மன்னார் நகரசபையின் அதிரடி நடவடிக்கைகளினால் இன்று (4) செவ்வாய்க்கிழமை மாலை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

-மன்னார் பஸார் பகுதியில் மன்னார் பொதுச்சந்தை வியாபார நிலைய பிரதான வீதியில் இன்று வெ;வாய்க்கிழமை (4) மாலை 3 மணியளவில் மரக்கறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட தென் பகுதி வியாபாரி மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கையினால் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் மன்னார் நகர சபையினால் பாதையோரம் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்ற இடங்களில் தெருவோற வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட மன்னார் நகர சபை அண்மையில் தடை விதித்ததோடு,அவசர அறிவித்தல் பிரசுரங்களையும் மன்னார் நகர சபை செயலாளர் வெளியிட்டிருந்தார்.

-இந்த நிலையில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி வீதிகளில் வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்த உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு மன்னார் நகர சபை இறுதி எச்சரிக்கை விட்டிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் பொதுச்சந்தை வியாபார நிலைய பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (4) மாலை 3 மணியளவில் தென் பகுதி வியாபாரி ஒருவர் தனது சக நண்பர்களுடன் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி குறித்த பகுதியில் மரக்கறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மன்னார் பொதுச்சந்தை வியாபார நிலையத்தில் உள்ள வர்த்தகர்கள் சிலர் மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட்,மற்றும் நகர சபை அதிகாரிகள் குறித்த வியபார நடவடிக்கைகளை உடனடியாக இடை நிறுத்தியதோடு,குறித்த இடத்தில் இருந்து உடனடியாக வியாபார பொருட்களை அகற்றிச் செல்லுமாறும் உத்தரவிட்டனர்.
-இந்த நிலையில் தென் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் தமது பொருட்களை வாகனத்தில் ஏற்றி அனுமதி வழங்கப்பட்டுள்ள இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

-மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பல்வேறு இடங்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை தடை விதித்துள்ள போதும் தென் பகுதி வியாபாரிகள் எவ்வித அனுமதியும் இன்றி மன்னார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் மன்னார் நகர சபை அண்மையில் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-
(04-04-2017)










மன்னார் பஸார் பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட தென் பகுதி வர்த்தகர்-அதிரடியாக வெளியேற்றிய மன்னார் நகர சபை Reviewed by NEWMANNAR on April 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.