அண்மைய செய்திகள்

recent
-

தம்பா வெற்றிக்கிண்ணம்-ஹில்லரி அணி வெற்றி-Photos


பல ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்துடன், ஆர்ப்பரித்த கரகோசத்துடன்,தம்பா வெற்றிக்கிண்ணம் வெற்றியாளன் கையில் சென்றது.

மன்னார் கிறீன் பீல்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 50 கழகங்கள் பங்கெடுத்த சுற்றுத்தொடரில் நேற்று 02 04 2017 அன்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மாபெரும் இறுதி போட்டியில் மன்னார் சாவற்கட்டு ஹில்லரி விளையாட்டுக்கழகத்தினருக்கும் தோட்டவெளி யுனைடெட் கழகத்தினருக்குமான போட்டியில் 4 - 0 என்ற கணக்கில் ஹில்லரி அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

விளையாட்டுடன் மாத்திரம் நின்று விடாமல் வறுமையின் கீழ் வாழும் பல மாணவர்களுக்கான கற்றல் உபகாரங்களையும் வழங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் "மன்னாரின் கல்விக் குரல்" அமைப்பினரால் ஒரு தொகுதி உபகரணங்களும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. ஸ்டான்லி டி மெல்,சூரியன் வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் s .n .டிலான் மற்றும் அருட் சகோதரர்கள் ரெஜினோல்ட் , விஜயதாஸ் தம்பாவின் பாசமிகு பெற்றோர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்..


























தம்பா வெற்றிக்கிண்ணம்-ஹில்லரி அணி வெற்றி-Photos Reviewed by NEWMANNAR on April 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.