பொது மக்களின் நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும்-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்-(படம்)
முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டம் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற போதும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
முள்ளிக்குளம் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (7) கலந்து கொண்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,
-அண்மையிலே கடற்படை பேச்சாளரின் கருத்தானது முள்ளிக்குளம் மக்களின் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என கூறி அரசியல் சாட்டுப்போக்குகளைத்தான் தெரிவிப்பதாக தென்னிலங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது.
-மக்களின் நியாயமான கோரிக்கைகளும்,நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிப்பதற்கான வழிவகைகலோ அல்லது அவர்களது வீடு,ஆலயம்,பாடசாலை போன்ற பூர்வீக இடங்களை விடுவிக்காது அபகரித்து வைத்துள்ளனர்.
-அண்மையில் இரண்டு ஆண்டுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் கால நீடிப்பு பெற்றுக்கொள்டமைக்கு அமைவாகக்கூட பொது மக்களின் நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என்கின்ற சரத்தையும் உள்ளீர்த்திருக்கின்ற காரணத்தினால் அதற்கு இனங்கிய இலங்கை அரசாங்கம் அந்த கோரிக்கையை ஏற்றாவது இந்த நிலங்களில் இருந்து வெளியேறுவதற்கூறிய வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும்.
-தொடர்ச்சியாக வடக்கு,கிழக்கிலே நில மீட்புக்கான போராட்டமும்,காணாமல் போனேரை கண்டறிதலுக்கான போராட்டமும் தொடர்ந்து கொண்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஜனநாயக ரீதியாக இந்த மக்களினுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்து அவர்களுடைய வாழ்விடங்களை வழங்க வேண்டிய தேவையும்,வழியுறுத்தலும் அரசாங்கத்திற்கு எழுந்து விட்டது.
அந்த காரியத்தை விரைவாக செய்ய வேண்டும் என வேண்டு கோள் விடுக்கின்றோம்.என மேலும் தெரிவித்தார்.
பொது மக்களின் நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும்-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்-(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 08, 2017
Rating:
No comments:
Post a Comment