இலங்கை தேசிய அணிக்குரிய தெரிவில் மன்னார் வீரர்கள் தெரிவு-Photos
இலங்கை 23 வயதுப்பிரிவு தேசிய அணிக்குரிய வீpரர்கள் தெரிவு 07.04.2017 இன்று மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மன்னார் வீரர்கள் 8 பேர் 2ம் கட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் 23 வயது தேசிய அணிக்குரிய தெரிவானது இன்று 07.04.2017 காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்ரென்வோள் தலைமையிலான குழுவினர் இத்தெரிவை மேற்கொண்டனர்.
வட மாகாணத்தில் இதுவரை பல தெரிவுகளை பல மாவட்டங்களில் மேற்கொண்டிருந்தும் இதுவரை தகுதியான எவரையும் தாம் இனங்காணவில்லை என்றும் தெரிவாகவுமில்லை என்றும் ஆஈனால் மன்னாரில்தான் தகுதியான 8 பேரை தாம் இனங்கண்டுள்ளதாகவும் இவர்களுள் 4 பேர் தேசிய அணியின் முதல் 11 வீரர்களுக்குள் நிச்சயமாக இடம் பெறுவர் என்றும் பாராட்டினார். அத்துடன் மன்னாரில் உதைபந்தாட்டம் உள்ளது என்றும் மன்னார் லீக் சிறப்பான முறையில் செயற்படுவதை தாம் உணருவதாகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சார்பில் லீக்கையும் வீரர்களையும் தாம் சிறப்பாக பாராட்டுவதாகவும் வாழ்த்தினார்.
தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற இனங்களுக்கு அப்பால் சிறந்த திறமையுடைய வீரர்கள் நிச்சயமாக இலங்கை தேசிய அணியில் இடம்பெறுவர் என்றும் இதற்கு தாம் உறுதியளிப்பதாகவும் நிச்சயமாக சிறந்த திறமையை காட்டிய மன்னார் வீரர்கள் இத்தேசிய அணியில் நிச்சயம் இடம்பெறுவர் என்றும் தெரிவித்தார். மன்னார் மாவட்ட லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களைச்சேர்ந்த வீரர்கள் இத்தெரிவில் கலந்து கொண்டனர். கலந்து தமது திறமையை வெளிக்காட்டிய சகல வீரர்களையும் தேசிய அணிக்கு தெரிவாகிய வீரர்களையும் மன்னார் லீக் வாழ்த்தி நிற்கிறது. கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்று வந்த இவ்வாறான தெரிவுகளை இன்று மன்னாரில் நடைபெற மன்னார் லீக் பல காலமாக முயற்சித்து இன்று வெற்றியும் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசிய அணிக்குரிய தெரிவில் மன்னார் வீரர்கள் தெரிவு-Photos
Reviewed by NEWMANNAR
on
April 08, 2017
Rating:

No comments:
Post a Comment