முள்ளிக்குளம் மக்களின் காணிகள் கடற்படையினரால் இன்று விடுவிப்பு. (படங்கள் )
கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிறுப்பு நிலங்கள்; இன்று (29) சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வந்த போட்டம் இன்று (29) சனிக்கிழமை 38 ஆவது நாளாகவும் இடம் பெற்றது.
இந்த நிலையில் கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் விடுவிப்பது குறித்து உயர் மட்ட கலந்துiராயடல் இன்று(29) சனிக்கிழமை காலை 10 மணியளவில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இடம் பெற்றது.
இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் இடம் பெற்ற காணி விடுவிப்பு தொடர்பாக அவசர கலந்துரையாடலில் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் , தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆகியோர் கலந்து கொண்டனர்.
முள்ளிக்குளம் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,,,
முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாக அவசர கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இடம் பெற்றது.
இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் இடம் பெற்ற காணி விடுவிப்பு தொடர்பாக அவசர கலந்துரையாடலில் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை,மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் உற்பட முள்ளிக்குளம் கிராம மக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் அவசர கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இரு வாரங்களுக்குள் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இன்றைய தினம் கடற்படை தளபதி முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு விஜயம் செய்து அவசர கலந்துரையாடலை நடாத்தி இறுதியாக முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று சனிக்கிழமை முதல் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முள்ளிக்குளம் மக்கள் இன்று சனிக்கிழமை முதல் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியும் என கடற்படைத்தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும் முள்ளிக்குளம் மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முள்ளிக்குளம் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் தமது சொந்த நிலங்களில் குடியமரவுள்ளனர்.
மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் வெற்றியளித்துள்ளது.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் முள்ளிக்குளம் காணி விடுவிப்பிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தார்.
ஆயர் அவர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது.
முள்ளிக்குளம் மக்களின் காணி விடுவிப்பிற்கு துரித முயற்சிகளை மேற்கொண்ட கடற்படை தளபதிக்கு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
முள்ளிக்குளம் காணி விடுவிப்பிற்கு ஜனாதிபதி முழுமையாக செயற்பட்டார்.மீள் குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன் அவசர கூட்டத்தை கடந்தவாரம் கூட்டியதன் பலனாகவே வெற்றி கிடைத்துள்ளது.
தற்போது முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தில் மீள் குடியேறவுள்ள மக்களுக்கு அமைச்சர் சுவாமிநாதன் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் முள்ளிக்குளம் மக்களின் நிலங்களில் உள்ள 22 வீடுகளில் குடியமர்ந்துள்ள கடற்படையினர் அங்கிருந்து வெளியேறுவதற்கு 8 மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வீடுகளில் உள்ள கடற்படையினரை வெகு விரைவில் வேறு இடத்திற்கு மாற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
மக்களின் தொடர் போராட்டத்தின் பலனாகவே முள்ளிக்குளம் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் முள்ளிக்குளம் ஆலயத்தில் இடம் பெறும் ஞாயிறு திருப்பலியுடன் அந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமரவுள்ளனர்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி பலவந்தமாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் சுமார் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
April 29, 2017
Rating:

No comments:
Post a Comment