வடகொரியாவுடன் சீனா முதலில் மோதும்: அந்தர் பல்டியடித்த அமெரிக்கா....
வடகொரியா இனி அணு ஆயுத சோதனை நடத்தினால் சீனா அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே பதற்ற நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாவது,
அணு ஆயுத சோதனை தொடர்பாக சீனா வடகொரியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் வடகொரியாவிடம் இனி அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாது என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளாதாக சீனா எங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதை மீறி அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தினால் சீனா அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வடகொரியாவுடன் சீனா முதலில் மோதும்: அந்தர் பல்டியடித்த அமெரிக்கா....
Reviewed by Author
on
April 28, 2017
Rating:

No comments:
Post a Comment