மோடியை சந்தித்த பிரதமர் : முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து....
5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மதியம் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது வணிகம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான சில ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்திய பிரதமரை சந்திப்பதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோடியை சந்தித்த பிரதமர் : முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து....
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment