வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்-Photos
வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம்வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இதேவேளை இந்த நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன் விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்வினை வவுனியா மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரின் அழைப்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்திருந்தார் .
வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்-Photos
Reviewed by NEWMANNAR
on
April 08, 2017
Rating:

No comments:
Post a Comment