46வது நாளையும் கடந்து நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடரும் வேலையற்ற பட்டதாரிகள்...
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 46வது நாளாகவும் தொடர்ந்தவண்ணமுள்ளது.
புதுவருடத்திலாவது தங்களது நியாயமான கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்புடன் தாங்கள் உள்ளதாகவும் பட்டதாரிகள் குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கம் இரண்டு மாத கால அவகாசத்தினை வழங்கியுள்ளபோதிலும் அது தொடர்பில் உறுதியான உறுதிமொழியை தங்களுக்கு வழங்கவில்லையெனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மேலும், தங்களது போராட்டம் என்றும் சாத்வீகமான போராட்டமாகவே நடைபெறும் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
46வது நாளையும் கடந்து நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடரும் வேலையற்ற பட்டதாரிகள்...
Reviewed by Author
on
April 08, 2017
Rating:

No comments:
Post a Comment