ரசாயன தாக்குதல் எதிரொலி: சிரியா மீது ஏவுகணை வீசிய அமெரிக்கா...
சிரியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது ரசாயண தாக்குதலை நடத்தியதற்கு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அமெரிக்கா அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள Idlib மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரசாயண தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சிரியா நாடுகள் காரணமில்லை என அந்நாட்டு அரசுகள் மறுப்பு தெரிவித்தன.
எனினும், ரசாயண தாக்குதலுக்கு சிரியா அரசாங்கமும் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து சிரியாவை கண்டிக்கும் வகையில் நேற்று இரவு அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.
அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலில் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதலுக்கு சிரியாவில் உள்ள Homs மாகாண ஆளுநரான Talal Barazi என்பவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
’சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தினாலும் எங்களது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது.
அமெரிக்காவின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் சிரியா மீதான இதுபோன்ற தாக்குதல் நிகழவும் வாய்ப்புள்ளது’ என ஆளுநர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நிகழ்த்தியுள்ள இத்தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்’ என சிரியா அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஜனாதிபதி கண்டனம்
இந்நிலையில் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என ரஷ்யா ஜனாதிபதியான விளாடிமிர் புடின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சிரியா அரசாங்கத்திற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரசாயன தாக்குதல் எதிரொலி: சிரியா மீது ஏவுகணை வீசிய அமெரிக்கா...
Reviewed by Author
on
April 07, 2017
Rating:

No comments:
Post a Comment