கூட்டமைப்பை பிரிக்க அரசாங்கம் முயற்சி! சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு....
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப் படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சி னைகளுக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் போராடுபவர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரசாங்கம் அவர்களின் போராட்டத்தை உதாசீனம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கில் பெண்கள் இவ்வாறு போரா ட்டத்தில் ஈடுபட்டால் அரசாங்கம் அலட்சியத்துடன் செயற்படுமா எனவும் அவர் கேள்வி யெழுப்பியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை காரணம் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களை நடுவீதியில் விட்டுள்ளது.
ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது போன்று தமிழர்களின் ஜனநாயக கட்டமைப்பையும் அழிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து கூட் டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டமைப்பை பிரிக்க அரசாங்கம் முயற்சி! சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு....
Reviewed by Author
on
April 10, 2017
Rating:

No comments:
Post a Comment