அண்மைய செய்திகள்

recent
-

இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்! சி.சிவமோகன்


பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கேப்பாபுலவு மக்களின் காணிகளில் இருந்து இராணுவமும் விமானப்படையும் உடனடியாக வெளியேற வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இரண்டு நாளாக இன்று இடம்பெற்றும் உணவு , நீர் ஒறுப்பு போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனுடன் செயலாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளச்செழியன், லவகுசன், மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்,

மக்களின் காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்த இராணுவத்தின் நடவடிக்கைகளை மாவட்டசெயலாளரும், பிரதேச செயலாளரும், அரசுக்கு தெரிவிக்க பின் நிற்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த காணியை அற்ப சொற்ப காரணம் காட்டி அரசுக்கு தாரை வாக்க முற்படுவது முந்தானை பிடித்து தமது பதவிகளை தக்கவைக்க முயற்சிப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கையின் காரணமாகத்தான் மக்கள் தொடர் போராட்டத்திலும் உணவு, நீர் ஒறுப்பு போராட்டத்திலும் குதித்து அரசியல்ரீதியான தீர்வை கோரி நிற்கின்றார்கள் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்! சி.சிவமோகன் Reviewed by Author on April 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.