வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ....
வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் வவுனியா வடக்கு பகுதியில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது
குறித்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான காதர் மஸ்தான், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு பதிலாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நா.சிவசக்தி ஆனந்தன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தியாகராஜா, ஜீ.ரி.லிங்கநாதன், செ.மயுரன் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள், பொது அமைப்புகளின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு கிராமங்களின் பொது அமைப்புக்களின் பிரதிநிதி ஒருவரையாவது அழைக்க வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் காதர் மஸ்தானால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ....
Reviewed by Author
on
April 26, 2017
Rating:

No comments:
Post a Comment