இலங்கையில் பேரனர்த்தம் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு....
வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் வரையில் கிடைத்த தகவல்களின்படி மத்திய நிலையத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அறிக்கைக்கு அமைய 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 114,124 குடும்பங்களை சேர்ந்த 442,299 பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தின் காரணமாக 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், 112 பேர் காணாமல் போயுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 24,603 குடும்பங்களை சேர்ந்த 101,638 பேர் 319 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பேரனர்த்தம் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு....
Reviewed by Author
on
May 28, 2017
Rating:

No comments:
Post a Comment