வவுனியாவில் நூற்றாண்டு விழா...
வவுனியா, ஓமந்தை, நாவற்குளத்தில் வாழ்ந்த கனகசபை நல்லதம்பியின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டபத்திறப்பு விழாவும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, நாவற்குளம் வீரசக்தி அம்மன் ஆலய வளாகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இதன்போது உடையாராக இருந்த நல்லதம்பியின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட மண்டபத்தினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வில், அக்கிராமத்தில் வாழ்ந்து வரும் முதியவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராசா, ஆர். இந்திரராஜா உட்பட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
வவுனியாவில் நூற்றாண்டு விழா...
Reviewed by Author
on
May 28, 2017
Rating:

No comments:
Post a Comment