பாப்பரசரின் பிரதிநிதியால் மன்னார் மறைமாவட்ட190 மறையாசிரியர்கள் கௌரவிப்பு....படங்கள் இணைப்பு
பாப்பரசரின் பிரதிநிதியால் மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 43 பங்குத் தளங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்கள் 190 பேரை கௌரவிக்கும் நோக்குடன் மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் அழைப்பை ஏற்று திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் வந்தனைக்குரிய பியர் நுயன் வான்டொட் ஆண்டகை மன்னாருக்கு சனிக்கிழமை (20.05.2017) அன்று விஐயம் மேற்கொண்டார்.
திருத்தந்தையின் தூதுவர் மன்னார் மறைமாவட்ட பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு வருகை தந்து வரவேற்றலும் திருக்கொடிகள் ஏற்றலும் சிறப்பு கூட்டுத்திருப்பலியும் இடம்பெற்ற்தோடு விசேடநிகழ்வாக பத்து வருடங்களுக்கு மேலாக மறையாசிரியர்களாக பணியாற்றிய 190 மறையாசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பாப்பரசரின் பிரதிநிதியால் மன்னார் மறைமாவட்ட190 மறையாசிரியர்கள் கௌரவிப்பு....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 23, 2017
Rating:

No comments:
Post a Comment