3,000 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டு சிறையில் இருந்து மூவாயிரத்திற்கும் மேலான கைதிகள் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் Makala என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு மற்றும் அஜாக்கிரதை காரணமாக இந்த சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்புவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறைச்சாலையில் இருந்து 50 கைதிகள் தப்பிவிட்டதாகவும், ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், நேற்று வெளியான செய்தியில் சிறையில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதாகவும் 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தப்பிய கைதிகளில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொலை குற்றவாளிகளும் உள்ளதாக தெரிகிறது.
மேலும், கைதிகள் ஆபத்தானவர்கள் என்பதால் அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் பொலிசாரிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3,000 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
Reviewed by Author
on
May 19, 2017
Rating:

No comments:
Post a Comment