57 மில்லியன் டொலருக்கு விற்பனையான வைர நகை: சுவிஸ் ஏலத்தில் சாதனை....
சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஏலத்தில் இரண்டு வைர நகைகள் 57.4 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் நேற்று முன் தினம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. உலகம் முழுவதில் இருந்து விலைமதிப்பற்ற நகைகள் இந்த ஏலத்தில் பங்கு பெற்றுள்ளன.
இந்நிலையில், The Apollo Blue என்ற பெயரிடப்பட்ட வைர நகை 42.087 டொலருக்கும், The Artemis Pink என்ற பெயரிடப்பட்ட வைர நகை 15.33 டொலருக்கும் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
இரண்டு வைர நகைகளையும் ஆசியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வாங்கியுள்ளார். ஆனால், அவர் யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கிரேக்க கடவுள் என்ற புணைப்பெயருடன் அழைக்கப்படும் நீலக்கலர் வைர நகை 14.54 கேரட்டும், இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள வைர நகை 16 கேரட்டும் உடையது.
எதிர்பார்த்த விலையை விட மிக அதிகளவி விற்பனை ஆகியுள்ளதால் முந்திய வைர நகைகளின் விற்பனை சாதனையை இந்த இரண்டு வைரங்களும் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
57 மில்லியன் டொலருக்கு விற்பனையான வைர நகை: சுவிஸ் ஏலத்தில் சாதனை....
Reviewed by Author
on
May 19, 2017
Rating:

No comments:
Post a Comment