தாய்லாந்தில் இரட்டை குண்டு வெடிப்பு: 40 பேர் படுகாயம்....
தாய்லந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இரட்டை குண்டு வெடித்ததில் 40-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விஷமிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்துமிடத்திலும் மற்றொரு வெடிகுண்டு வெடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த இரட்டை குண்டு வெடிப்பில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மீட்பு நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இஸ்லாமிய பிரிவினைவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பல ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் இரட்டை குண்டு வெடிப்பு: 40 பேர் படுகாயம்....
Reviewed by Author
on
May 09, 2017
Rating:

No comments:
Post a Comment