பட்டதாரிகளின் செயற்பாடு குறித்து வடமாகாண சபையில் அதிருப்தி,,,,
வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களை சபைக்கு வர விடாமல் வேலையற்ற பட்டதாரிகள் தடுத்தமை மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயல் என வடமாகாணசபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 92ஆம் அமர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி மாகாண சபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதனால் முதலமைச்சர் உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு உள்ளே வர முடியவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சபையில் சுட்டிக்காட்டிய வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இது உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயல் என கூறினார்.
இதனை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டதுடன் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் சபைக்கு வெளியே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளின் செயற்பாடு குறித்து வடமாகாண சபையில் அதிருப்தி,,,,
Reviewed by Author
on
May 09, 2017
Rating:

No comments:
Post a Comment