மன்னார் - பாலையடிப்புதுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 6.2 மில்லியனில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் திறந்துவைப்பு
மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலையடிப்புதுக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் TSEP நிதியில் இருந்து ரூபாய் 6.2 மில்லியனில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக்கட்டிடம் உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர்களது பாவனைக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு 02-05-2017 செவ்வாய் காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்துவைத்தார், அத்தோடு அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக மடு வலையக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கிராமத்தின் மூத்த பிரஜைகள் என பலரும் கலந்துகொண்டனர், திறப்புவிழாவை பாடசாலையின் அதிபர் எப்.எக்ஸ்.அன்டன் சேவியர் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்துவைத்தார், அத்தோடு அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக மடு வலையக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கிராமத்தின் மூத்த பிரஜைகள் என பலரும் கலந்துகொண்டனர், திறப்புவிழாவை பாடசாலையின் அதிபர் எப்.எக்ஸ்.அன்டன் சேவியர் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
மன்னார் - பாலையடிப்புதுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 6.2 மில்லியனில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் திறந்துவைப்பு
Reviewed by NEWMANNAR
on
May 03, 2017
Rating:

No comments:
Post a Comment