71 நாட்கள் வீதி வாழ்க்கை தொடர்கிறது.... கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் நில மீட்பு போராட்டம்...
கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இன்றுடன் 71 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் 71 நாட்களாக வீதியில் தாம் அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் இன்னும் தமக்கு ஒரு முடிவை வழங்க இந்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இவ்வாறு தொடர்ந்து வீதியில் போராட இந்த அரசாங்கம் தம்மை நிர்பந்தித்துள்ளதாகவும் போராடிவரும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
71 நாட்கள் வீதி வாழ்க்கை தொடர்கிறது.... கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் நில மீட்பு போராட்டம்...
Reviewed by Author
on
May 10, 2017
Rating:

No comments:
Post a Comment