வவுனியாவில் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியை.....
வவுனியாவில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை நேற்றைய தினம் (08/05/2017) தாய் தந்தையற்ற உயர்தர மாணவன் ஒருவரை தாக்கி மண்டையை உடைத்த சம்பவமும் அது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவனை இன்று பிறிதொரு ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் தெரியவருவதாவது :-
நேற்றயதினம் நூலகத்திற்கு சென்றுவிட்டு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியை ஒருவர் தாக்கியதாகவும் தாக்குதல் காரணமாக மாணவனின் தலை உடைபட்டுள்ளது இதை அறிந்த சக ஆசிரியரான கணித ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனுக்கு முதலுதவி செய்துவிட்டு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிடுவதற்கு சக மாணவர்களின் உதவியை நாடியுள்ளார் குறித்த ஆசிரியருக்கு பயத்தில் எந்த மாணவரும் முன்வராத நிலையில் மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் எனக்கு தாய் தந்தை இருந்தால் இப்படி தட்டிக்கேட்காமல் விட்டிருப்பார்காளா இன்று சகமாணவன் ஒருவரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு பரிதாபப்பட சக மாணவன் பாதிக்கப்பட்ட மாணவனை அழைத்துக்கொண்டு அதிபரிடம் முறையிட்டுள்ளனர் . இதையறிந்த கணித ஆசிரியர் முறையிட உதவிய மாணவனை மேற்சட்டையை கழுத்தை இறுக்கும் வகையில் பிடித்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
அதிபருக்கு உண்மையை சொன்னதால் தாக்கப்பட மாணவன் தனது பெற்றோரின் உதவியோடு காவல்த்துறையில் முறைப்பாடு செய்ததோடு வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
வவுனியா காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
வவுனியா நகரில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் அண்மையில் அதிபராக பொறுப்பேற்ற புதிய அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் நிலையில் சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் பாடசாலைக்கு அபகீர்த்க்தியை ஏற்ப்படுத்தும் வகையில் அமைந்து விடுவதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.
மேலதிக தேவை ஏற்ப்படும் பட்சத்தில் எம்மால் சேகரிக்கப்பட்ட ஆதாராங்கள் அடங்கலாக அனைத்து விபரங்களும் பதிவிடப்படும் .
வவுனியாவில் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியை.....
Reviewed by Author
on
May 10, 2017
Rating:

No comments:
Post a Comment