மன்னாரில் வெசாக் பண்டிகை அன்னதான நிகழ்வு......
புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்-Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா)நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
- சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
- புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
- புத்தர் இறந்த நாள்.
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். "வெசாக்" மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும்.
இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.
மன்னாரில் வெசாக் பண்டிகை அன்னதான நிகழ்வு......
Reviewed by Author
on
May 10, 2017
Rating:

No comments:
Post a Comment