மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சீமெந்து கல் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட செங்கல் மற்றும் சீமெந்து கல் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
செங்கல் மற்றும் சீமெந்து கல் உற்பத்தி நிலையத்திற்கான இயந்திர உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
ஒருமில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த களஞ்சிய சாலையுடன் இணைந்ததான கல் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையத்தினை மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், ஆகியோர் திறந்து வைத்ததுடன், உபகரணங்களையும் வழங்கி வைத்து வேலையையும் ஆரம்பித்துவைத்தனர்.
இந்த நிலையத்தின் மூலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், கிராமத்தில் அபிவிருத்தியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வீடமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளுக்கான கற்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் குறித்த கல் உற்பத்தி நிலையம் மூலம் கற்களுக்கான கேள்வியை ஈடு செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சீமெந்து கல் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு...
Reviewed by Author
on
May 21, 2017
Rating:

No comments:
Post a Comment