பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..!(படங்கள் இணைப்பு)
மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது, இன்று அதிகாலை 03:30 மணியளவில் குறித்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதோடு, தாக்குதலினால் பள்ளிவாசல் கண்ணாடிக்கு மாத்திரமே சேதமேற்பட்டுள்ளதகாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவமானது ஆறு பேர் கொண்ட கும்பலினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்..!(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
May 21, 2017
Rating:

No comments:
Post a Comment