வெடித்துச் சிதறும் எரிமலை..கிராமமே எரிந்து நாசம்!
இந்தோனிஷியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி தீக்குழம்பை கக்கி வருவதால் அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தோனிசியாவில் Sumatra தீவில் Sinabung என்ற எரிமலை வெடித்துச் சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது.
இதனால் அப்பகுதி அருகே உள்ள கிராம மக்கள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. எரிமலை தீக்குழம்புகளை கக்கி வருவதால் அப்பகுதி முழுவது புகை மற்றும் சாம்பல்கள் பரவுகிறது.
கடந்த சில தினங்களாகவே எரிமலை வெடித்துச் சிதறி வருவதாகவும், இதன் காரணமாகவே சுமார் 3 கி.மீற்றர் தொலைவிற்கு புகைகள் மற்றும் சாம்பல்கள் பரவுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி அருகே இருந்த கிராம மக்கள் தங்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியில் சென்று வந்ததாகவும், தற்போது எரிமலையின் தாக்கம் அதிகம் இருப்பதால், எரிமலைக்கு சுமார் 7 கி.மீற்றர் அளவிற்கு உள்ள அனைத்து கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிமலைக்கு அருகே இருந்த சிமாசிம் என்ற கிராமம் முற்றிலும் எரிமலை பாதிப்பில் சிக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதே போன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடித்துச் சிதறியதாகவும், அதில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும், இது ஒரு மிகப் பெரிய பேரழிவு என்று கூறப்படுகிறது.
வெடித்துச் சிதறும் எரிமலை..கிராமமே எரிந்து நாசம்! 
 Reviewed by Author
        on 
        
May 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 07, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 07, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 07, 2017
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment