எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? ஜனாதிபதிக்கு மகஜர்...
வவுனியாவில் போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள்,
1. எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா?
2. உயிருடன் இருந்தால் அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
3. உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலை செய்யப்பட்டு எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்
4. காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிருடன் இருப்பின் அவர்கள் தத்தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழிவிடுவதோடு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்
5. படையினர் நிலை கொண்டுள்ள அனைத்து தமிழ் மக்களின் காணிகளும் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும்
இந்த மகஜரை பெற்றுக்கொண்ட வவுனியா அரசாங்க அதிபர் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.

எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? ஜனாதிபதிக்கு மகஜர்...
Reviewed by Author
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment