தலைமன்னார் மேற்கில் மே தினக் கொண்டாட்டம்.(படங்கள் )
தலைமன்னார் மேற்கில் மே தினத்தை சிறப்பிக்குமுகமாக புனித அந்தோனியார் முற்றம் ஒன்று மீனவர்களின் ஆதரவுடன் பங்குத் தந்தை நவரட்ணம் தலைமையில் பல இலட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்டு அதனை கிராம மக்கள் 30.04.2017 அன்று மாலை அழங்காரங்கள் மூலம் அழகுபடுத்தி 01.05.2017 அன்று காலை தொழிலாளர் தின திருப்பலிக்கு அயத்தப்படுத்தினர்.
01.05.2017 அன்று காலை 06.00 மணியளவில் தொழிலாளர்களின் தலைவராம் புனித சூசையப்பரின் திருச்சொருபத்தை பக்தர்கள் புனித லோறன்சியார் தேவாலயத்திலிருந்து கவி பாடியவன்னம் சுமந்து சென்றுகடற்கரையில் உள்ள புனித அந்தோனியார் வைத்தனர்.
தேவாலயத்தில் பங்குத் தந்தை நவரட்ணம் தலைமையில் தொழிலாளர் தின சிறப்புத் திருப்பலி ஆரம்பமானது.
தொடர்ந்து இறுதி ஆசீர்வாதத்தின் பின்னர் புனிதரின் சொருபம் பக்தர்களினால் ஆலயத்திலிருந்து கவிபாடப்பட்டு கடற்கரையை நோக்கி சுமந்து செல்லப்பட்டு தலைமன்னார் பாரம்பரிய வழக்கப்படி புனிதரின் திருச்சொருபத்தை சுமந்து செல்லும் படகு குழுக்கல் சீட்டின் மூலம் திருவாளர் செல்ரன் ராஜீ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமையினால் அவரது பட அழங்கரிக்கப்பட்டு ஆயத்த நிலையில் காணப்பட்டது. அதில் புனிதரின்
சொருபம் ஏற்றப்பட்டு அப் படகு முன் செல்ல ஏனைய படகுகள் அப்படகைத் தொடர்ந்து சென்றது. இது கரையில்இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பக்திமிக்க ஒரு சமய சடங்காகவும் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடலிலே பக்தர்கள் செபமாலையை செபித்தவர்களாக ஒவ்வொரு படகுகளிலும் சென்றனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு தலைமன்னார் வழக்கப்படி நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் காலை உணவு மற்றும் குளிர்
பாணங்களையும் வழங்கினர் இறுதியில் மே தினக் கொண்டாட்டமானது சரியாக 09.30 மணியளவில் திருச் சொருபஆசீருடனும் படகுகள் ஆசீர்வதிக்கப்பட்டும் நிறைவுற்றது.
தகவல்& படங்கள்
அருன்
தலைமன்னார்

Reviewed by NEWMANNAR
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment