தொழிலாளர் தினத்திலும் மன்னார் தொழிலாளர்களுக்கு விடுமுறை இல்லையா??-Photos
மன்னாரில் தொழிலாளர் தினத்திலும் விடுமுறை வழங்காத வீதி அபிவிருத்தி அதிகார சபை
தொழிலாளர் தினமான இன்று திங்கட்கிழமை மன்னாரில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுகின்ற சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார்-நகர சபை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை விடுமுறையற்ற நிலையில் தொழிலாளர்கள் சிலர் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பான புகைப்படங்கள் கெமராக்களில் பதிவாகியுள்ளது.
ஆண்கள்,பெண்கள் என இருபாலாரும் வேளையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மே தினமான இன்று சர்வதேச ரீதியில் தொழிலாளர்களுக்கான உரிமையை கோரூம் தினமாக கருதப்பட்டுள்ள போதும் குறித்த தொழிலாளர்கள் தமது விருப்பு,வெறுப்பிற்கு அப்பால் தமது கடமையினை மேற்கொண்டு வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
தொழிலாளர் தினத்திலும் மன்னார் தொழிலாளர்களுக்கு விடுமுறை இல்லையா??-Photos
Reviewed by NEWMANNAR
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment