தமிழகத்திலும் அஞ்சலி வழிபாடு
முள்ளிவாய்க்கால் மனித படுகொலையின் 8ஆண்டு நினைவு நாளான நேற்றைய தினம் தமிழகத்தில் உள்ள பல்வேறுபட்ட இந்து ஆலயங்களில் ஈழத்தில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கான பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
இலங்கைச் சிவ சேனைத் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலாளர் இராம இரவிக்குமார், கவிஞர் காசிஆனந்தன் ஆகியோர் ஏற் பாட்டில் மயிலாப்பூரில் அருள்மிகு கபாலீச்சரர் கோயிலில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நூற்றுக்கணக்கான சிவ அடியார்களும் தொண்டர்களும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்.
அதேநேரம் வடக்கே காசியில் கங்கைக்கரையிலும் தமிழ்நாட்டில் இராமேச்சரத்திலும் சீர்காழியிலும் மதுரை யிலும் தஞ்சாவூரிலும் கும்பகோணத்திலும் கோயம்புத்தூலும் என பல இடங்களில் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்காக அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழகத்திலும் அஞ்சலி வழிபாடு
Reviewed by NEWMANNAR
on
May 19, 2017
Rating:

No comments:
Post a Comment