முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை கொச்சைப்படுத்தியதால் மாணவர்கள் மோதல்!
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலியை கொச்சைப்படுத்தியதால் தமிழ்- சிங்கள மாணவர்களிடையே நேற்றைய தினம் இரவு பலத்த வாக்குவாதத்தினை அடுத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த பல்கலையில் தமிழ் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்ட அதே வேளை சிங்கள மாணவர்கள் மது அருந்தி வெற்றி விழா கொண்டாடியதுடன் தமிழ் இனத்தினையும் போராட்டத்தினையும் இழிவுபடுத்தி தகாத வார்த்தைகளினால் பேசியுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்க முனைந்தபோது சக மாணவர்கள் தடுத்துள்ளனர். தொடர்ந்து இடம்பெற்ற முறுகல் நிலையை அடுத்து சிங்கள மாணவர்கள் இறுதியில் மன்னிப்பு கோரிய பின்னர் மாணவர்கள் சமரசமாகியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை கொச்சைப்படுத்தியதால் மாணவர்கள் மோதல்!
Reviewed by NEWMANNAR
on
May 19, 2017
Rating:

No comments:
Post a Comment