முள்ளிக்குளத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.(படங்கள்)
முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் கெனடி தெரிவித்தார்.
நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் அயர் இல்ல பிரதி நிதிகள்,முள்ளிக்குளம் கிராம மக்கள், மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியம்,முள்ளிக்குளம் கடற்படை அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம் பெற்றது.
அதனைத்தொடர்ந்து முள்ளிக்குளம் மக்களை இணைந்து குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த குழுவானது அனைத்து மக்களின் கருத்துகளுக்கு அமைவாகவே நியமிக்கப்பட்டது.
பின் குறித்த குழுவின் உதவியுடன் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் செயலாளர் ஜோசப் கெனடி ஆகியோரின் தலைமையில் குறித்த காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட இடங்கள் முள்ளிக்குளம் கடற்படை அதிகாரிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
மேலும் குறித்த பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதைகளும் அடையாளம் காணப்பட்டது.
-அடையளம் காணப்பட்ட நிலப்பகுதிகள் குறித்து உடனடியாக கடற்படை தளபதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக முள்ளிக்குளம் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி உறுதியளித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் கெனடி தெரிவித்தார்.
காணிகள் அடையாளப்படுத்தும் போது முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா,மற்றும் மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment