வவுனியா இளைஞன் மீது தாக்குதல்!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 15 பேர் அடங்கிய குழுவினர் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் நேற்று பிற்பகல் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தாண்டிக்குளம் முதலாம் ஒழுங்கையில் வீடு எடுத்து தங்கியிருக்கும் 15இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நேற்று மதியம் 12.10 மணியளவில் மதுபோதையில் அப்பகுதியிலுள்ள இளைஞரான சிவதீஸ்வரன் கஜராஜ் என்ற 21வயதுடைய இளைஞனை வீட்டிற்குள் சென்று அவரை இழுத்துக் கொண்டு வெளியே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதைத்தடுக்கச் சென்ற தாயார் மீதும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளதாகவும் இளைஞன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இளைஞனின் பாவனையிலிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர். இத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் 12.35 மணியளவில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
வவுனியா இளைஞன் மீது தாக்குதல்!
Reviewed by Author
on
May 30, 2017
Rating:

No comments:
Post a Comment