மன்னார் கீழயன்குடியிருப்பு புனித.தோமையார் ஆலய அர்ச்சிப்பு விழா...
மன்னார் மறைமாவட்டத்தில் கீழயன்குடியிருப்பு என்னும் பங்கிலுள்ள பருத்திப்பண்ணை என்னும் கிராமத்தில் புனித.தோமையார் என்னும் புதிய ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை 27.05.2017 சனிக்கிழமை ஆலயத்தை அர்ச்சிப்பு செய்து வைத்து.
அன்றைய தினம் ஆயரின் தலைமையில் பங்கு தந்தை அருட்பணியாளர் டெரன்ஸ் குலாஸ், தலைமன்னார் பங்கு தந்தை நவரட்ணம், ஆயரின் செயலாளர் அருட்பணி ஆர்.நீக்கிலாஸ், அருட்பணி மரியதாஸ் லியோன், சிறுத்தோப்பு பங்குத் தந்தை அருட்பணி றொனிஸ் வாஸ் அடிகளார்களுடன் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுப்பதையும் அவ் ஆலயத்தில் 55 இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தையும் வழங்கியதோடு திருச்சுரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
மன்னார் கீழயன்குடியிருப்பு புனித.தோமையார் ஆலய அர்ச்சிப்பு விழா...
Reviewed by Author
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment