மூதூர் சிறுமிகள் மீதான துஸ்பிரையோகம்-குற்றவாழிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்-செல்வம் எம்.பி.
மூதூரைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் மீண்டும் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.தெற்கில் பெரும் அனர்த்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கிழக்கில் சிறுமிகளுக்கு நடந்த இந்த அநியாயம் அதற்குரிய கவனத்தைப் பெற முடியாமல் போயுள்ளது.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கவலை தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று (31) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
ஏற்கனவே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு மிகக் காலம் தாழ்த்தியே நமது நீதியமைப்பில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
அதற்கிடையில் இன்னும் ஏராளமான துஸ்பிரையோகங்கள் நடந்து முடிந்து விடுகின்றன.
உதாரணமாக புங்குதீவைச் சேர்ந்த பள்ளி மாணவி வித்தியாவின் வன்புணர்வுக்குப்பினரான படுகொலை நாட்டையே உலுக்கிப் போட்ட கொடும் நிகழ்வு.
ஆனால் அதற்கான நீதி இத்தனை மாதங்கள் கடந்தும் கிடைக்கவில்லை.
நீதி விசாரணையை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டாம் என்று குரல் கொடுக்கும் நிலையைத் தான் நாம் கடந்த காலங்களில் செய்தோம்.
அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முதலே இன்னும் எத்தனை துஸ்பிரயோகங்கள் எத்தனை வன்முறைகள்.
நாம் இவற்றை கண்டிப்பதுடன் மட்டும் நின்றுவிடப் போகிறோமா? நமது பெண் குழந்தைகளின் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்வதற்கானதும் பாதுகாப்பானதுமாக மாற்ற என்ன செய்யப்போகிறோம்.
இந்த சிறிய குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்த அந்த இரண்டு நபர்களையும் நாம் இந்த மோசமான புதிய கலாச்சாரங்களின் அதியுச்ச தொழில் நுட்ப வளர்ச்சியின் விகாரமான போக்காகவே விளங்கி கொள்கிறோம்.
இதனைச் செய்த அவர்களுக்கான தண்டனையை உறுத்திப்படுத்துவதோடு எதிர்காலத்தில் இவை போன்ற துஸ்பிரயோகங்கள் மீள நிகழாமைக்கான நமது முயற்சிகளை பற்றியும் சிந்திக்க வேண்டும், நடைமுறையைப்டுத்த வேண்டும்.
குறித்த சிறுமிகளின் எதிர் காலத்திற்காகவும் இந்த நாட்டில் வாழும் அனைத்துப் பெண்களின் எதிர்காலத்திற்காகவும் நாம் தண்டனைகளையும் விழிர்ப்புணர்வையும் சக மனிதர்கள் மேலான நேசத்தையும் பாதுகாப்பான சமூகச் சூழலையும் ஏற்படுத்த உழைக்க வேண்டும்.குறிப்பிடப்பட்டுள்ளது .
-மன்னார் நிருபர்-
(31-05-2017)
தொடர்புடைய செய்திகள்
காடையர்கள் தமிழ் மாணவிகள் மீது பாலியல் பலாத்காரம். – மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

Reviewed by NEWMANNAR
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment