கனடா நாட்டு சிறுமிக்கு உயரிய விருது வழங்கிய பிரித்தானிய இளவரசர்கள்...
கனடா நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவரின் சமூக சேவைகளை பாராட்டி அவருக்கு உயரிய விருதை வழங்கி பிரித்தானிய இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹரி கெளரவித்துள்ளனர்.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Peterborough நகரில் Faith Dickinson(14) என்ற சிறுமி வசித்து வருகிறார்.
சிறுமிக்கு 9 வயதாக இருந்தபோது அவரது உறவினர் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் தாக்கியுள்ளது.
இந்நோயால் அவர் துன்பப்படுவதை பார்த்து இதேபோல் நோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என சிறுமி தீர்மானித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தொண்டு மையம் ஒன்றை தொடங்கி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் முகவரிகளை சேகரித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வந்துள்ளார்.
குறிப்பாக, இன்று வரை 3,500 நபர்களுக்கு குளிருக்கு அணியும் உடுப்புகளை பிரத்யேகமாக வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளார்.
சிறுமியின் சமூக சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை குவித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய முன்னாள் இளவரசியான டயானாவின் நினைவில் வழங்கப்படும் Diana Legacy Award என்ற விருதுக்கு கனடா சிறுமியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து 20 பேர் தெரிவு செய்யப்பட்ட இந்நிகழ்வு லண்டன் நகரில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹரி விருதுகளை வழங்கி அனைவரையும் பாராட்டியுள்ளனர்.
நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் பேசியபோது, இதுபோன்ற உதவும் மனப்பான்மை கொண்ட நபர்களின் அன்பு மற்றும் கருணையில் நமது தாயார் இன்னும் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாக உணர்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
கனடா நாட்டு சிறுமிக்கு உயரிய விருது வழங்கிய பிரித்தானிய இளவரசர்கள்...
Reviewed by Author
on
May 20, 2017
Rating:

No comments:
Post a Comment