உலகின் புகழ்மிக்க வீரர்கள்: கோஹ்லி, டோனிக்கு என்ன இடம் தெரியுமா....
விளையாட்டுப் போட்டிகளை முன்னெடுத்து நடத்தும் பிரபல தனியார் ஊடக நிறுவனம் ஒன்று உலகின் பிரபலமான 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிரபலமான 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் குறித்த ஊடக நிறுவனம், இணையதளத்தில் தேடப்படும் அளவு மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள புகழ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் உலகின் பல்வேறு நாடுகளில் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் புகழ்மிக்க வீரர்கள் 100 பேரை தெரிவு செய்துள்ளது.
இலங்கையை பொறுத்தமட்டில் எந்த ஒரு வீரரும் குறித்த பட்டியலில் இந்த முறை தெரிவாகவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 13-வது இடத்தையும் டோனி 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும், இந்திய அணி வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா முறையே 90 மற்றும் 95-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ முதலிடத்தைப் பெற்றுள்ளார். மெஸ்ஸி 3-வது இடத்தையும் ரோஜர் பெடரர் 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
நெய்மர் 4-வது இடத்தையும் தடகள வீரர் உசேன் போல்ட் 7-வது இடத்திலும், டென்னிஸ் வீரர் ராபேல் நடால் 9-வது இடத்திலும் கோல்ப் ஜாம்பவான் டைகர் உட்ஸ் 10-வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் புகழ்மிக்க வீரர்கள்: கோஹ்லி, டோனிக்கு என்ன இடம் தெரியுமா....
Reviewed by Author
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment