அமெரிக்காவின் 20 ஆண்டுகளாக இருந்த வழக்கத்தை ரத்து செய்த டிரம்ப்!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்லாமிய தலைவர்களை அழைத்து கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்ட இப்தார் விருந்தை டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
ரமலான் மாதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது வழக்கம்.
இது, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், புஷ், ஒபாமா ஆகியோர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.
1996ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இப்தார் விருந்து நிகழ்ச்சி இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் நடத்தப்படவில்லை. வாழ்த்து செய்திகள் மட்டுமே வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலர் தில்லெர்சன், இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக டிரம்ப் பேசுவார் என அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பும். மேலும், டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் சிரியா, லிபியா, சூடான் உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் 20 ஆண்டுகளாக இருந்த வழக்கத்தை ரத்து செய்த டிரம்ப்!
Reviewed by Author
on
June 27, 2017
Rating:

No comments:
Post a Comment